தமிழக செய்திகள்

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சீர்காழியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சீர்காழி:

சீர்காழியில் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமை தாங்கி கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். மாவட்ட அவை தலைவர் பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சக்தி, சந்திரமோகன், மாவட்ட துணை செயலாளர் செல்லையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் வினோத் வரவேற்று பேசினார். கூட்டத்தில், சீர்காழி நகர் பகுதியில் அதிகளவில் உறுப்பினர்களை சேர்ப்பது. கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து வீடு, வீடாக தெரியப்படுத்துவது. வருகிற 20-ந் தேதி மதுரையில் நடைபெறும் எழுச்சி மாநாட்டில் சீர்காழி நகர் பகுதியில் உள்ள நிர்வாகிகள் குடும்பத்தோடு கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகர தலைவர் ராமலிங்கம், முன்னாள் நகர செயலாளர்கள் பக்கிரிசாமி, மணி, நகர துணை செயலாளர் பரணிதரன், மகளிர் அணி செயலாளர் லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்