தமிழக செய்திகள்

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கடலூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கடலூர்:

கடலூர் வடக்கு மாவட்டம் புதுப்பாளையம் பகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பீச் ரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு பகுதி செயலாளர் வக்கீல் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் சேவல்குமார், மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், வர்த்தக பிரிவு செயலாளர் வரதராஜன், ஒன்றிய செயலாளர் காசிநாதன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் கலந்து கொண்டு பேசுகையில், புதுப்பாளையம் பகுதியில் 15 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைக்க வேண்டும். அதில் மகளிரணியினர், இளம்பெண்கள் பாசறையை சேர்ந்த 25 பேர் கட்டாயம் இடம் பெற வேண்டும். புதிய உறுப்பினர்களை சேர்ப்பதில் முழு மனதோடு ஈடுபட வேண்டும் என்றார். கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி தமிழ்ச்செல்வன், இலக்கிய அணி ஏழுமலை, ஒன்றிய துணை செயலாளர் வேல்முருகன், மணிமாறன், முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், பகுதி இணை செயலாளர் இன்பமேகம், துணை செயலாளர்கள் ரூபஸ்ரீ, பழனிசாமி, பொருளாளர் பாலமுருகன், மாவட்ட பிரதிநிதிகள் சர்மிளா, பார்த்திபன், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்