தமிழக செய்திகள்

அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் பணி தொடங்கியது

அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் பணி தொடங்கியது. இதனை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தனர். #OPS | #EPS | #ADMK

தினத்தந்தி

சென்னை,

அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப் பட வேண்டும்.

தேர்தலுக்கு முன்னதாக புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல் நடைபெறும். இது அ.தி.மு.க. சட்ட விதிகளில் உள்ளது.

அதன்படி அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் பணி ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் இந்த பணி தொடங்கியது. அவர்கள் இருவரும் புதிய விண்ணப்ப படிவங்களை வழங்கி பணியை தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து ஏராளமான தொண்டர்கள் இன்று அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் குவிந்தனர். அவர்கள் விண்ணப்ப படிவங்களை பெற்று உறுப்பினராக சேரும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மேலும் ஏராளமானோர் உறுப்பினர் அட்டைகளை புதுப்பிக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

#OPanneerselvam | #EdappadiPalaniswami | #ADMK | #TNPolitics #OPS | #EPS

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்