கோவில்பட்டி:
கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் நகர அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், கருப்பசாமி, பேரூராட்சி செயலாளர்கள் முத்துராஜ், கப்பல் ராமசாமி, வாசமுத்து, ராஜ்குமார், கோவில்பட்டி யூனியன் துணைத் தலைவர் பழனிச்சாமி, ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ, வைகைசெல்வன், தலைமைக் கழக பேச்சாளர் குமுதா பெருமாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் கடம்பூர் ராஜூ பேசுகையில், கட்சி தலைமை அலுவலகத்தில் வரும் 9,10-ந்தேதிகளில் நடைபெறும் கூட்டத்திற்கு பின்னர் பொதுசெயலாளர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிப்பு இருக்கலாம். கட்சி பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்பதை யாராலும் தடுக்க முடியாது, என்றார்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சத்யா, நகர்மன்ற உறுப்பினர்கள் செண்பகமூர்த்தி, கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், கடம்பூர் நகர ஜெயலலிதா பேரவை நிர்வாகி மோகன், மாவட்ட மாணவரணி துணை தலைவர் செல்வக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.