தமிழக செய்திகள்

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறந்து வைக்கப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7 அடி உயர வெண்கல சிலை அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

ஆனால் ஜெயலலிதாவின் சிலை பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. அக்கட்சி தொண்டர்களே சிலையைப் பார்த்து, யார் இது என்று கேட்கும் அளவிற்கு முகம் மாறுதல் அடைந்து காணப்பட்டதாக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதையடுத்து ஜெயலலிதாவின் புதிய சிலை உருவாக்கப்பட்டு வந்தது. இந்த சிலை முழு வடிவம் பெற்று, சென்னை கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று காலை திறக்கப்பட்டது. முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்