தமிழக செய்திகள்

மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரைக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு

வள்ளியூரில் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரைக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு கொடுத்தனர்.

தினத்தந்தி

வள்ளியூர் (வடக்கு):

அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளராக ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஐ.எஸ்.இன்பதுரையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் ஐ.எஸ்.இன்பதுரை வள்ளியூருக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு மாவட்ட இணை செயலாளர் ஞானபுனிதா, பொதுக்குழு உறுப்பினர் வடலிவிளை செழியன், எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, மாவட்ட விவசாய பிரிவு துணை செயலாளர் லாசர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் சந்திரமோகன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அன்றோ ரஸ்வின், ராஜலிங்கம், காவை பாலன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்