தமிழக செய்திகள்

ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வக்கீல் நோட்டீஸ்

ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

உண்மையான அ.தி.மு.க. யார்? என்ற சண்டை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடையே நீடித்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆதரவு மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. இதில் வீதிக்கு வந்து தனிக்கட்சி நடத்த தைரியம் இருக்கிறதா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்தார்.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்து கட்சியின் கொடி, பெயரை பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் உள்ளனர்.

கட்சியின் பொறுப்பு ஈபிஎஸ் வசம் இருப்பதால், ஓபிஎஸ் இது போன்று செயல்படுவது குறித்து சட்ட விளக்கம் விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உயர்நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்து கட்சியின் கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்று பயன்படுத்தி வருவது குறித்து விளக்கம் கேட்டு அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை