தமிழக செய்திகள்

சோதனைக்கு பின் எஸ்.பி. வேலுமணிக்கு பூசணிக்காயில் திருஷ்டி சுற்றி போட்ட தொண்டர்கள்...!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை இன்று நடத்தினர்.

கோவை,

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில்அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அது சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 10 இடங்களிலும், கோவையில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்ப்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி என மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். சுமார் 9 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த சோதனை நிறைவு பெற்றது.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பின் கோவையில் உள்ள அவரது வீட்டில் குவிந்த தொண்டர்கள் எஸ்.பி. வேலுமணிக்கு ஒரு பெரிய பூசணிக்காயில் சூடம் ஏற்றி மூன்று முறை திருஷ்டி சுற்றி போட்டனர். அப்போது தொண்டர்கள் பெரும் கோஷங்களை எழுப்பினர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்