சென்னை,
இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
மாறி மாறி குற்றம் சாட்டிக்கொண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதை தாமதப்படுத்தி வரும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.பிரதமர் வந்து அடிக்கல் நாட்டி, ஆண்டுக்கணக்கில் ஆனபிறகும் அடிப்படையான பணிகளைக் கூட இன்னும் தொடங்காமல் இருப்பது வேதனைஅளிக்கிறது.
இதன் பிறகும் இழுத்தடிக்காமல், திட்ட வரைவு, நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மத்திய , மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.