தமிமுன் அன்சாரி : கோப்பு படம் 
தமிழக செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிமுன் அன்சாரி மனு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவை செயலகத்தில் தமிமுன் அன்சாரி மனு அளித்தார்.

சென்னை

கடந்த வெள்ளிக்கிழமை கூடிய தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். இரண்டு நாள் விடுமுறைக்குப் பின்பு இன்று மீண்டும் சட்டசபை கூடியது. முதலில் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கபட்டது.

கண்டன பதாகையுடன் தமிமுன் அன்சாரி சட்டப்பேரவை வருகை தந்தார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவை செயலகத்தில் தமிமுன் அன்சாரி மனு அளித்தார்.

ஏற்கனவே திமுக மற்றும் கருணாஸ் மனு வழங்கிய நிலையில் தற்போது தமிமுன் அன்சாரியும் மனு அளித்துள்ளார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை