தமிழக செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக: எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தூண்டுகின்றன - மத்திய மந்திரி குற்றச்சாட்டு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தூண்டுகின்றன என்று மத்திய மந்திரி பிரகலாத் சிங் படேல் குற்றம் சாட்டியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை ராமகிருஷ்ண மடமும், டெல்லி ராமகிருஷ்ண மடமும் இணைந்து சுவாமி விவேகானந்தரை பற்றிய குறும்படத்தை நான்கு பரிமாண (4 டி) தொழில்நுட்பத்தின் மூலம் தயாரித்துள்ளது. இதேபோல சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில், சுவாமி விவேகானந்தர் பற்றிய நான்கு பரிமாண (4 டி) தொழில்நுட்பத்தில் உண்மை அனுபவம் என்ற கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை விவேகானந்தர் இல்லத்தில், மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி பிரகலாத் சிங் படேல் நேற்று தொடங்கிவைத்தார். அப்போது விவேகானந்தா கல்லூரி செயலாளர் சுவாமி சுகாதேவானந்தா, ராமகிருஷ்ண மடத்தின் செயலாளர் விமுர்த்தானந்தா உள்பட ராமகிருஷ்ண மடம் மற்றும் விவேகானந்தர் இல்ல நிர்வாகிகள் உடன் இருந்தார்.

இதனை தொடங்கி வைத்த பின்னர், பிரகலாத் சிங் படேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுவாமி விவேகானந்தர் இளமைக்காலத்தில் கடுமையான கஷ்டத்தை சந்தித்தார். இருப்பினும் நம்பிக்கையோடு போராடியதால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்தார். விவேகானந்தரின் இளமைக்கால வாழ்க்கை வரலாறு பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இடையே பரவவேண்டும். இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

தென் மாநிலங்களில் சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்ததே இதற்கு சாட்சி.

சட்டம் என்பது மிகப்பெரியது. குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது தேசத்தின் ஒற்றுமைக்காகவும், வளர்ச்சிக்காகவும் கொண்டுவரப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கட்சிகள் தவறாக திசை திருப்புகிறார்கள். தேசத்தின் ஒற்றுமைக்காக சுவாமி விவேகானந்தர் என்னென்ன அம்சங்கள் கூறியிருக்கிறாரோ, அது குடியுரிமை திருத்த சட்டத்தத்தில் இருக்கிறது.

எதிர்க்கட்சிகளுடைய தூண்டுதலின் பேரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. பொதுமக்களும், போராடுபவர்களும் இதனை ஒருநாள் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள். அப்போது அவர்கள் வருத்தப்படுவார்கள். சட்டமும் இதற்கான பதிலை கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து சென்னை கோட்டையில் அமைந்துள்ள அருங்காட்சியகத்துக்கு மத்திய மந்திரி பிரகலாத் சிங் படேல் வந்தார். அங்கு அவரை தமிழக சுற்றுலாத்துறை செயலாளர் அசோக் டோங்ரே, மத்திய தொல்லியல் துறையின் சென்னை கோட்டை அருங்காட்சியக காப்பாளர் வெற்றிச்செல்வி ஆகியோர் வரவேற்றனர். அந்த அருங்காட்சியகத்தில் உள்ள பழம்பொருட்களை பிரகலாத் சிங் படேல் சிறிது நேரம் பார்வையிட்டார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு செல்வதற்கு முன்பு நிருபர்களிடம், இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட வந்தேன். இந்தியா சுதந்திரம் பெற்ற அன்று 4 இடங்களில் முதன் முறையாக ஏற்றப்பட்ட தேசிய கொடிகளில் ஒன்று இங்கு பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் என்று அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை