தமிழக செய்திகள்

வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்;

வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு அமைச்சு பணியிடம் அனுமதிக்க வேண்டும். புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகங்களில் ஆட்சி அலுவலர் பணியிடம் அனுமதிக்கப்பட வேண்டும். தோட்டக்கலைத்துறையிலும் ஆட்சி அலுவலர் பணியிடம் அனுமதிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவாரூர் வேளாண்மை துறை இணை இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மாதவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தம்பிதுரை கலந்து கொண்டு பேசினார். முடிவில் சங்க மாவட்ட பொருளாளர் விஜயசங்கர் நன்றி கூறினார்.