தமிழக செய்திகள்

விடுமுறை நாளை முன்னிட்டு குற்றால அருவிகளில் நிரம்பி வழியும் சுற்றுலாப்பயணிகள்

இன்று விடுமுறை நாள் என்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர்.

தினத்தந்தி

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் நன்றாக உள்ளது. இங்கு உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

இன்று விடுமுறை நாள் என்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். மெயின் அருவியை விட பழைய குற்றாலம் அருவியில் அதிகமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆனந்தமாக உற்சாகமாக அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

இன்னும் 2 நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் குற்றாலத்திற்கு அதிக சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான தங்கும் விடுதிகள் குற்றாலத்தில் நிரம்பி விட்டன. வாகன போக்குவரத்தும் அதிகரித்து காணப்படுகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்