தமிழக செய்திகள்

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு அதிமுக முழு ஆதரவு - ஓபிஎஸ்

அதிமுக கூட்டணியில் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுகிறது.

தினத்தந்தி

சென்னை,

புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதியில் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்று துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு