கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

வேட்பாளர் விரைவில் அறிவிப்பு; இரட்டை இலை எங்களுக்கே கிடைக்கும்: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

ஈரோடு,

தமிழ்நாட்டில் பொதுத்தேர்தலுக்கு பிறகு, கொரோனா தாக்கம் காரணமாக அரசியல் களம் பெரும் பரபரப்பு இல்லாத நிலையிலேயே இருந்தன. இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. முதல் முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது.

இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரசுக்கு வழங்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அறிவித்து காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, அதிமுக சார்பில் வேட்பாளரை நியமிக்க உள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக பணிமனை அமைக்க பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பின் அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கு கிடக்கும் என்று முழு நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பதை விட தேர்தல் களத்தில் சந்திப்பதே சரியானது எனவும் அவர் தெரிவித்தார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்