தமிழக செய்திகள்

பொய் வழக்குகள் போட்டு அதிமுகவினரை முடக்கிவிட முடியாது- எடப்பாடி பழனிசாமி

வழக்குகளை கண்டு அஞ்சக்கூடிய கட்சி அதிமுக அல்ல என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசியதாவது:

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது திமுக அரசால் பொய் வழக்கு போடப்படுகிறது. வழக்குகளை கண்டு அஞ்சக்கூடிய கட்சி அதிமுக அல்ல. பொய் வழக்குகள் போட்டு அதிமுகவினரை முடக்கிவிட முடியாது. எம்ஜிஆர் இருக்கின்ற போது பல்வேறு சோதனைகளுக்கு உள்ளானார்கள். அதையெல்லாம் உடைத்தெறிந்து சாதனை படைத்த தலைவர் உருவாக்கிய கட்சி அதிமுக என்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்