சென்னை,
தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, அ.தி.மு.க. கூட்டணியில் எவ்வித விரிசலும் இல்லை. அதனால் வருகிற 2021 சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி தொடரும் என கூறினார்.
இதேபோன்று தமிழகத்தில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுவதற்கு அ.தி.மு.க. அரசு துணை போகாது என்றும் அவர் கூறியுள்ளார்.