தமிழக செய்திகள்

வேதா இல்ல விவகாரம்: மேல் முறையீடு செய்ய அதிமுக முடிவு

வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்ற ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்கக்கோரி அதிமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை

போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது செல்லாது என சென்னை ஐகோர்ட் அண்மையில் தீர்ப்பு அளித்தது.

மேலும்,வேதா இல்லத்தை ஜெயலலிதாவின் வாரிசுதாரர்களாக அறிவிக்கப்பட்ட தீபா மற்றும் தீபக்கிடம் 3 வாரங்களுக்குள் ஒப்படைக்க சென்னை மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்ற ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்கக்கோரி அதிமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா இல்ல அறக்கட்டளை உறுப்பினர் சிவி சண்முகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்