தமிழக செய்திகள்

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது

கோவையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி போலீசாரால் இன்று காலை கைது செய்யப்பட்டு உள்ளார்.

தினத்தந்தி

கோவை,

அ.தி.மு.க.வில் முன்னாள் எம்.பி.யாக இருந்தவர் கே.சி. பழனிசாமி. நாமக்கல்லின் திருச்செங்கோடு தொகுதியில் இருந்து நாடாளுமன்ற எம்.பி.யாக கடந்த 1989ம் ஆண்டு தேர்வானார். இவர் காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் கட்சி விரோத நடவடிக்கைக்காக அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனிடையே, கோவை லாலிரோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று அதிகாலையில் சென்ற போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனபின்பு அவரை கைது செய்து சூலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அ.தி.மு.க. பெயரில் போலி இணையதளம் நடத்தியுள்ளார் என்ற தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார் என கூறப்படுகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்