தமிழக செய்திகள்

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. ஆர்.டி. கோபாலன் உடல்நல குறைவால் காலமானார்

அ.தி.மு.க.வை சேர்ந்த மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யான ஆர்.டி. கோபாலன் உடல்நல குறைவால் இன்று காலமானார்.

தேனி,

அ.தி.மு.க.வில் முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் காலத்தில் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் ஆர்.டி. கோபாலன். கடந்த 1980ம் ஆண்டு கம்பம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 47 ஆயிரத்து 577 வாக்குகள் பெற்று தி.மு.க. வேட்பாளர் கம்பம் மகேந்திரனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதன்பின்னர் இவர் கடந்த 1986ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரை மாநிலங்களவை எம்.பி.யாக இருந்துள்ளார். சமீப நாட்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலமானார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...