தமிழக செய்திகள்

அதிமுக பொதுக்குழு வழக்கு: ஜூன் 15-ந் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்டு

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை ஜூன் 15-ந் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

அதிமுக பெதுக்குழு தீர்மானங்களையும், பெதுச் செயலாளர் தேர்தலையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இபிஎஸ் தரப்பு வாதத்தில், கட்சி விதிப்படி, ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியுள்ளோம், அவரை மீண்டும் சேர்த்தால் குழப்பம் அதிகரிக்கும். ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால், எந்த விளக்கமும் கேட்காமல் தன் சொந்த தம்பி ராஜாவை கட்சியை விட்டு நீக்கி ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுத்தார்.

அதே நடைமுறை தான் இவரது நீக்கத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது. கட்சி விதிகள் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டவை அல்ல. காலத்திற்கு ஏற்ப கட்சி விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என வாதிடப்பட்டது.

இதையடுத்து, அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு விசாரணையை ஜூன் 15-ந் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதுவரை இபிஎஸ் தரப்பு வாதம் கேட்கப்பட்டு வந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு பதில் வாதத்திற்கு விசாரணையை ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு