தமிழக செய்திகள்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனு ஏற்பு

நாளை வரை வேட்புமனுக்களை திரும்பப்பெறுவதற்கான கால அவகாசம் உள்ளது.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 18 மற்றும்19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. நேற்று பிற்பகல் 3 மணியோடு வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்றது.

இரு நாட்களில் மொத்தம் 225 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. வேட்புமனு பரிசீலனையை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

தற்போது அவரது வேட்புமனு பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. நாளை வரை வேட்புமனுக்களை திரும்பப்பெறுவதற்கான கால அவகாசம் உள்ளது.

இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் இந்த தேர்தலை நடத்த தடை செய்யக்கோரி அவசர வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். இந்த வழக்குவிசாரணை நேற்று நடந்தபோது, வரும் 24ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், அதுவரையில் தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும் தெரிவித்து இருந்தது.

எடப்பாடி பழனிசாமியை தவிற வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே வரும் 24ம் தேதி நீதிமன்ற உத்தரவினை அடுத்து தேர்தல் முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுமிறது.  

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை