தமிழக செய்திகள்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.  இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றும், நாளையும் நடக்கிறது. வேட்புமனு பரிசீலனை 20-ந்தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை 21-ந்தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட விரும்பும் கட்சி தொண்டர்கள், தலைமைக்கழகத்தில் கட்டணத் தொகை ரூ.25 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்று அ.தி.மு.க. தேர்தல் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்து இருந்தனர். அ

தன்படி அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்பதால் போட்டியின்றி எடப்பாடி பழனிசாமி தேர்வாக வாய்ப்புள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்