சென்னை,
தமிழகத்தில் பிரிக்கப்பட்ட மற்றும் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் இன்னும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
அந்த வகையில், இந்த 9 மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இன்று முதல் 4 நாட்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.