தமிழக செய்திகள்

அதிமுக விவகாரம் : தலைமை தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் - சத்யபிரதா சாகு

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினை பற்றி இந்திய தலைமை தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இன்று தொடங்குகிறது இப்பணிகளை 2023 மார்ச் மாதத்தில் முடிக்கத் திட்டமிட்டுள்ளது.

இதற்காகவே '6 பி' என்று தனியாக ஒரு படிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இது தொடர்பாக இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஸ் தரப்பில் இருந்து தனித்தனியாகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில், அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு பின் தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினை குறித்து இந்திய தேர்தல் ஆணையமே முடிவு செய்யும். ஆதார் இல்லாவிடில் தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 11 ஆவணத்தை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கலாம். பாஸ்போர்ட், வங்கிக்கணக்கு, பான்கார்டு உள்ளிட்ட 11 ஆவணங்களை வாக்காளர் பட்டியலுடன் சேர்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை