கோப்புக்காட்சி 
தமிழக செய்திகள்

மாநிலங்களவை உறுப்பினர் பதவி: அதிமுக தலைமை நல்ல முடிவை அறிவிப்பார்கள் - பிரேமலதா விஜயகாந்த்

மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக அதிமுக தலைமை நல்ல முடிவை அறிவிப்பார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

திருச்சி,

திருச்சியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.யால் இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்காகத்தான் இத்தகைய சட்டங்கள் என்பதனை அனைவரும் உணர வேண்டும்.

தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய 2 கட்சிகளும் தமிழகத்தின் கடன் சுமையை மாறி மாறி ஏற்றுவதை நிறுத்தி விட்டு வேலைவாய்ப்பிற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

தே.மு.தி.க.விற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தொடர்ந்து கேட்டு வருகிறோம். இது குறித்து அ.தி.மு.க. தலைமை மூத்த உறுப்பினர்களுடன் ஆலோசித்து வருவதாக கூறியுள்ளது. அவர்கள் நல்ல முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். தே.மு.தி.க.விற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என கூட்டணி அமைக்கும் போதே பேசியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு