உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க. ஒருங்கிணைந்த உளுந்தூர்பேட்டை ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மணிராஜ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் துரை முன்னிலை வகித்தார். அவைத் தலைவர்கள் பாண்டியன், செல்வராசு ஆகியோர் வரவேற்றனர்.
கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குமரகுரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு அனைத்து கிளைகளிலும் கட்சி கொடியேற்ற வேண்டும். கள்ளக்குறிச்சியில் நடைபெறவுள்ள பொன்விழா ஆண்டு நிறைவு விழா கூட்டத்தில் திரளாக கலந்து கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர், கடந்த வாரம் உடல் நலக்குறைவால் உயிரிழந்த அ.தி.மு.க. ஒன்றிய யெலாளர் வக்கீல் பழனிவேல் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட அவை தலைவர் எஸ்.கே. ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தியாகதுருகம்
தியாகதுருகத்தில் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அ.தி.முக.வி.ன் 51- வது ஆண்டு தொடக்க விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் அய்யப்பா தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் கதிர்வேல், மாவட்ட பிரதிநிதி குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சின்னதுரை வரவேற்றார்.
அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு நிறைவடைந்து 51-வது ஆண்டு தொடங்கியதை அடுத்து, அனைத்து ஊராட்சிகளிலும் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்க வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மதியழகன், கணபதி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சந்திரசேகர் மற்றும் கழக நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் உள்ளிட்ட 100- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.