சென்னை
முன்னாள் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் புவனகிரி சட்டசபை உறுப்பினரான அருண்மொழி தேவன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. அவர் இன்று மாலை த.வெ.க.வில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.வான இவர், அக்கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளராக இருந்து வருகிறார். கடலூர் தொகுதிக்கான முன்னாள் எம்.பி.யாக இருந்திருக்கிறார். புவனகிரி தொகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.