தமிழக செய்திகள்

திமுகவை தோற்கடிக்க வேண்டுமென்றால், அதிமுக ஒன்றுபட வேண்டும் - சசிகலா

திமுகவை தோற்கடிக்க வேண்டுமென்றால், அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளார்.

சென்னை,

அதிமுக நிறுவன தலைவரும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில், எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சசிகலா கூறியதாவது:-

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து, திமுகவை வீழ்த்தி, அதை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்ஜிஆரிடம் சமர்ப்பிப்போம். திமுகவை தோற்கடிக்க வேண்டுமென்றால், அதிமுக ஒன்றுபட வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும். எங்கள் கட்சிக்காரரை சந்திப்பதற்கு, எனக்கு என்ன பயம்? விரைவில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமியை சந்திக்க திட்டம் உள்ளது.

மறைந்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சொல்வதை மட்டுமே செய்வார்கள். மக்களை ஒருபோதும் அதிமுக ஏமாற்றியது இல்லை. ஆகவே வரும் காலங்களில் நன்றாக யோசித்து திமுக அரசு செயல்பட வேண்டும்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்தபோதே கவர்னர் உரை தயாரிக்கப்பட்டவுடன் கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்படும். அதன் பின்னர் அதில் திருத்தம் இருந்தால், அவர்களே செய்து அனுப்புவார்கள். தொடர்ந்து இரண்டாவது முறையும் அனுப்ப வேண்டும். அதை பார்த்த பிறகு தான் புத்தகமாக அச்சிடப்படும். ஆனால் திமுக அரசு ஒரு முறை அனுப்பினார்களா அல்லது எத்தனை முறை அனுப்பினார்கள் என்று தெரியவில்லை. ஆகவே இதுகுறித்து கருத்து சொல்வதற்கு ஏதுமில்லை.

கவர்னரை எப்படி நடத்த வேண்டும் என்ற அணுகுமுறை உள்ளது. அதைப்போல தமிழக கவர்னரை, தமிழக அரசு நடத்த வேண்டும். ஒருவருக்கொருவர் ஒருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல், ஓட்டு போட்ட மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்று யோசிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்த காதலன்..ஆத்திரத்தில் காதலி செய்த கொடூரம்

இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்கக் கோரி திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ்

மும்பை விமான நிலையத்தில் 2 விமானங்கள் உரசல்; பெரும் விபத்து தவிர்ப்பு

மூணாறில் இருந்து திருவனந்தபுரம், கோழிக்கோடுக்கு புதிய பஸ் சேவை

பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்காக பெற்ற மகளை கொன்ற கொடூர தந்தை கைது