தமிழக செய்திகள்

அதிமுகவில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 23 தொகுதிகளுக்கு அறிவிப்பு

அதிமுகவில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது

சென்னை,

அ.தி.மு.க. கூட்டணியில் இதுவரை பா.ஜ.க.வுக்கு 27, பா.ம.க.வுக்கு 18, அ.ம.மு.க.வுக்கு 11, த.மா.கா.வுக்கு 5, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்றாலும், இரு கட்சிக்கும் தலா 2 தொகுதிகள் வழங்கப்படும் என தெரிகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இதுவரை கூட்டணி கட்சிக்கு 62 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்னும் 6 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கினாலும், 163 தொகுதிகளில் அ.தி.மு.க. நேரடியாக களம் இறங்குகிறது. என்றாலும், கூட்டணியில் உள்ள சில கட்சிகளையும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்து, தொகுதிகள் எண்ணிக்கையை மேலும் உயர்த்த அ.தி.மு.க. தலைமை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அதிமுகவில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன் விவரம் வருமாறு:

எடப்பாடி தொகுதி: எடப்பாடி பழனிசாமி,

வேப்பனஹல்லி: கேபி முனுசாமி

திண்டுக்கல்; திண்டுக்கல் சீனிவாசன்

நத்தம்- நத்தம் விசுவநாதன்

தொண்டாமுத்தூர் ; எஸ். பி. வேலுமணி

குமாரபாளையம் -பி. தங்கமணி

ராயபுரம் -டி. ஜெயக்குமார்

மைலம்- சி. வி. சண்முகம்

மதுரை மேற்கு - செல்லூர் கே. ராஜு

பாலக்கோடு- கே. பி. அன்பழகன்

நன்னிலம் - ஆர். காமராஜ்

வேதாரண்யம் -ஓ. எஸ். மணியன்

விராலிமலை -டாக்டர் சி. விஜயபாஸ்கர்

கோவில்பட்டி: கடம்பூர் சி. ராஜு

திருமங்கலம்: ஆர்.பி உதயகுமார்

சிவகாசி : கே. டி. ராஜேந்திரபாலாஜி

மதுரவாயல்: பா. பெஞ்சமின்

களசபாக்கம்: தி அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி

திருப்பரங்குன்றம்: . வி. வி. ராஜன் செல்லப்பா

பவானி: கே. சி. கருப்பண்ணன்

ஜோலார்பேட்டை : கே. சி. வீரமணி

கரூர்: எம். ஆர். விஜயபாஸ்கர்

அரியலூர்: தாமரை எஸ். ராஜேந்திரன்

முதற்கட்ட பட்டியலின் படி முன்னாள் அமைச்சர்கள் 20 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள சி.வி.சண்முகம் மைலம் சட்டமன்றத் தொகுதியில் களமிறங்குகிறார். சிவி சண்முகத்தின் எம்.பி பதவி 2028 ஆம் ஆண்டு வரை உள்ளது.