தமிழக செய்திகள்

கோவையில் வாக்கு எந்திரம் மாற்றப்பட்டதாக அ.தி.மு.க. உள்பட வேட்பாளர்கள் தர்ணா

கோவை மாநகராட்சி 32-வது வார்டில் வாக்கு எந்திரத்தை மாற்றியதாக அ.தி.மு.க. உட்பட வேட்பாளர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

கோவை,

கோவை மாநகராட்சி 32 வது வார்டில் வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் திமுக வேட்பாளர் பார்த்திபன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக அந்த வார்டில் பதிவான வாக்கு எந்திரத்தை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் கொண்டுவரப்பட்ட போது அதில் சீல் சரியாக வைக்கவில்லை.

முகவர்களின் கையெழுத்து அதில் இடம் பெறவில்லை என்றும், இந்த வெற்றியை ரத்து செய்து மறு தேர்தல் அறிவிக்க வேண்டும் என்று கோரி வாக்கு எண்ணிக்கையின் போது அ.தி.மு.க. மற்றும் பிற கட்சி வேட்பாளர்கள் கூச்சலிட்டனர்.

தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தின் முன்பு அவர்கள் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்