தமிழக செய்திகள்

வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராக உள்ளது - அமைச்சர் கடம்பூர் ராஜூ

வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராக உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

தூத்துக்குடி,

இது குறித்து தூத்துக்குடியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது தேர்தலுக்காக மு.க.ஸ்டாலின் கிராமசபை கூட்டங்களை நடத்தினார். இது தோல்வி அடைந்ததால்தான், இனி தொகுதிவாரியாக மக்களை ஏமாற்ற தயாராகி விட்டார். தி.மு.க.வினரை மக்கள் ஒருபோதும் நம்ப தயாராக இல்லை. தேர்தலுக்காக வேல் ஏந்தி வேடமிடுகிறவர்கள், கடவுளை ஏமாற்ற முடியாது.

வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராக உள்ளது. மக்களின் ஏகோபத்திய ஆதரவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அ.தி.மு.க. 3-வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. இது ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் அல்ல, ஆட்சி தொடர்வதற்கான தேர்தல் என்ற மனநிலையில்தான் மக்களும் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்