தமிழக செய்திகள்

210 தொகுதிகளில் வென்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மதுரை,

மதுரை என்று சொன்னாலே நமக்கு நியாபகம் வருவது மீனாட்சி அம்மன். திமுக கூட்டணி இன்னும் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. ஆனால் நமது கூட்டணி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டது. தமிழகத்தை யார் ஆளவேண்டும்.. யார் ஆளக்கூடாது என்பதை தீர்மானிக்க சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.

நமது கூட்டணி 210 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போட்டியிட்ட மாவட்டம் தென் மாவட்டம். தென் மாவட்டங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக உள்ளது. மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும். தமிழகத்தில் 31 ஆண்டுகளாக ஆட்சிபுரிந்த கட்சி அதிமுக.

மோடி பொறுப்பேற்றவுடன், இந்தியா வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியாவை பார்த்து உலக நாடுகள் பொறாமைப்படும் அளவுக்கு நமது நாட்டின் வளர்ச்சி உள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் ஒதுக்கி வருகிறார். காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக. விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்யும் கட்சி திமுக. ஊழல்களால் கலைக்கப்பட்ட ஒரே கட்சி திமுக.

அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை மத்திய அரசிடம் இருந்து பெற்றோம். அதிமுக ஆட்சிக்காலத்தில் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும். குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அனைவரும் சுறுசுறுப்பாக செய்லபட வேண்டும். மீண்டும் வலிமையான பாரதம், வளமான தமிழகம் அமைக்கப்பட வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார்.