தமிழக செய்திகள்

இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி : வாக்காளர்கள், கூட்டணி கட்சியினருக்கு விஜயகாந்த் நன்றி

இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்களுக்கு, வாக்களித்த வாக்காளர்கள் மற்றும் வெற்றிக்காக பாடுபட்ட கூட்டணி கட்சியினருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர்.

இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்களுக்கு, வாக்களித்த வாக்காளர்கள் மற்றும் வெற்றிக்காக பாடுபட்ட கூட்டணி கட்சியினருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறந்த முறையில் பிரசாரம் செய்ததற்காக தமக்கும், பிரேமலதாவிற்கும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதலமைச்சர் நன்றி தெரிவித்ததாகவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்