தமிழக செய்திகள்

“தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும்” - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் அரசு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டுள்ளார். அவரை வரவேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இருவரும் விநாயகர் சிலையையும், நடராஜர் சிலையையும் நினைவுப்பரிசாக அமித்ஷாவிற்கு வழங்கினர்.

இந்த விழாவின் போது அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அமித்ஷா காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து விழாவில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார். மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில் 3-வது முறையாக வெற்றிக்கனியை பறிப்போம் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்