கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக-பாஜக இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக-பாஜக இடையே பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணிக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக-பாஜக இடையே பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தமிழக முதலமைச்சர் பழனிசாமியில் இல்லத்தில், தமிழக பாஜக மாநில தலைவர் எ.முருகன், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை