தமிழக செய்திகள்

எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

தினத்தந்தி

தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தோகைமலை வட்டார மருத்துவ அலுவலர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் நித்தியா முன்னிலை வகித்தார். இதில், கலை குழுவினர் எய்ட்ஸ் என்றால் என்ன? அது எவ்வாறு பரவும்? பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி? என்பது குறித்து கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டன. இதில், நம்பிக்கை மையத்தின் ஆலோசகர் சுதா, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அமுதா ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தோகமலை பஸ் நிலையம், நாகனூர் கடைவீதி, காவல்காரம்பட்டி வாரச்சந்தை பகுதிகளிலும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்