தமிழக செய்திகள்

சென்னை - சேலம் இடையே மீண்டும் விமான சேவை தொடக்கம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னை - சேலம் இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்படவுள்ளது.

தினத்தந்தி

சென்னை, 

சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு விமானம் இயக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் விமான சேவை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் சேலத்தில் இருந்து பெங்களூரு, கொச்சின், ஐதராபாத், சென்னை போன்ற நகரங்களுக்கு விமான சேவை தொடங்க 2 நிறுவனங்கள் முன்வந்தன.

அதன்படி, கடந்த 16-ம் தேதியில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டது. முதலில் பெங்களூரு-கொச்சிக்கு இடையே விமானம் இயக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னைக்கு விமான சேவை தொடங்கப்படவுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக இந்த சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தினசரி விமான சேவையை தொடங்க முன்வந்தது.

இதனால் சென்னை - சேலம் இடையே மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் விமான சேவை தொடங்கப்படவுள்ளது. சென்னையில் இருந்து காலை 11.20க்கு புறப்படும் விமானம் பகல் 12.30க்கு சேலம் சென்றடையும் என தகவல் வெளியாகியுள்ளது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து