தமிழக செய்திகள்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டன

11 மாதங்களுக்கு பிறகு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டன.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தன. நோய்த்தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததன் காரணமாக கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த மாதம் 19-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. மற்ற கல்லூரி மாணவர்களும், பள்ளிகளில் பிற வகுப்பு மாணவர்களும் தொடர்ந்து ஆன்லைன் வாயிலாகவே பாடங்களை கற்று வந்தனர்.

இந்த நிலையில் 11 மாதங்களுக்கு பிறகு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து கலை, அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினீயரிங் உள்ளிட்ட கல்லூரிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகள், ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் ஆன்லைன் வகுப்புகளையே தொடர திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?