கோப்புப் படம் 
தமிழக செய்திகள்

'டான்செட்' தேர்வை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை மறுநாள் விடுமுறை..!

நாளை மறுநாள் நடைபெற உள்ள 'டான்செட்' தேர்வை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நாளை மறுநாள் மே 14-ம் தேதி அனைத்து கலை, அறிவியல் மற்றும் பொறியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற முதுகலை படிப்புகளில் சேருவதற்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு என்று அழைக்கப்படும் 'டான்செட்' தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

இந்த 'டான்செட்' தேர்வு வருகிற 14 மற்றும் 15-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகு சனிக்கிழமை உட்பட வாரத்தில் 6 நாட்கள் கல்லூரி வேலை நாட்களாக உள்ளது.

இந்த நிலையில் டான்செட் தேர்வில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதற்கு வசதியாக நாளை மறுநாள் சனிக்கிழமை தமிழகத்தில் அனைத்து கலை, அறிவியல் மற்றும் பொறியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உயர் கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...