தமிழக செய்திகள்

தனிப்பிரிவு போலீசார் கூண்டோடு மாற்றம்

தனிப்பிரிவு போலீசார் கூண்டோடு மாற்றம்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நடக்கும் நிகழ்வுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு உடனடியாக தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் எஸ்.பி. தனி பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இவர்கள் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சட்டம்- ஒழுங்கு பிரச்சினை, குற்ற சம்பவங்கள், அரசியல் கட்சி நிகழ்வுகளின் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே தகவல் தெரிவிக்கும் பணியை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் உடுமலை, அவினாசி, காங்கயம், பல்லடம், தாராபுரம் ஆகிய உட்கோட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணியாற்றிய தனிப்பிரிவு போலீசார் பலர் இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவிட்டார். பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட போலீசார் தனிப்பிரிவில் இருந்து போலீஸ் நிலைய பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறிப்பாக உடுமலை உட்கோட்டத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றிய தனிப்பிரிவு போலீசார் கூண்டோடு மாற்றப்பட்டு போலீஸ் நிலைய பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.