தமிழக செய்திகள்

கூட்டணி விவகாரம்: பா.ஜ.க. தேசிய தலைமையின் வழிகாட்டுதலின்படி செயல்படுவோம் - வானதி சீனிவாசன்

மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதில் மற்ற கட்சிகளிடம் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை என எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

தினத்தந்தி

கோவை,

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பா.ஜ.க. தலைவர்கள் தொடர்ந்து பேசி வருவதாகவும், மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதில் மற்ற கட்சிகளிடம் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கூட்டணி விவகாரத்தைப் பொறுத்தவரை பா.ஜ.க. தலைவர்கள் மற்ற கட்சிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறார்கள். மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதில் மற்ற கட்சிகளிடம் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

எனவே இந்த கூட்டணிக்குள் இன்னும் அதிகமான கட்சிகளை கொண்டு வருவது, புதிதாக வரும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி மேற்கொள்வது உள்ளிட்ட அனைத்தும் பா.ஜ.க. தேசிய தலைமையின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் நடைபெறும்" என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை