தமிழக செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி பேச்சு நடக்கிறது -டி.டி.வி. தினகரன் பேட்டி

அ.ம.மு.க. வேலூர் மண்டல தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நேற்று வேலூரில் நடந்தது.

தினத்தந்தி

வேலூர்,

அ.ம.மு.க. வேலூர் மண்டல தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நேற்று வேலூரில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கினார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

நானும் ஓ.பி.எஸ்.சும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே இணைந்து பணியாற்றுவோம் என முடிவெடுத்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒரு சில கட்சிகளுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறோம். அது எல்லாம் நல்லபடியாக முடிந்த பிறகு கூட்டணிக் குறித்து முறையாக உங்களுக்கு சொல்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி பிதற்றுவதற்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. அ.தி.மு.க. இயக்கத்தை கையகப்படுத்தி வைத்துள்ள அந்த சுயநலவாதிகளுக்கு மக்கள் மன்றத்தில் தோல் உரிக்கப்படுகின்ற காலம் வெகு விரைவில் வரும். தமிழ்நாட்டு மக்கள் துரோகத்திற்கு என்றைக்கும் ஆதரவாக இருக்க மாட்டார்கள். தமிழகத்தில் மாற்று சக்தியாக அ.ம.மு.க.வை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு