தமிழக செய்திகள்

சட்டசபை தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா? கிருஷ்ணசாமி பதில்

மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் . அவர் கூறியதாவது, 

ஜனவரி 7-ந் தேதி மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்தான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.ஆணவ படுகொலையை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும். பள்ளி பாடப்புத்தகத்தில் அது குறித்தான பாடங்களை சேர்க்க வேண்டும். த.வெ.க. மாநாட்டை விஜய் வெற்றிகரமாக நடத்தியுள்ளார். அங்கிள் என்ற வார்த்தை ஒன்னும் கெட்டவார்த்தை கிடையாது. த.வெ.க.வுடன் கூட்டணி சேர்வீர்களா என்று கேட்கிறீர்கள். எங்கள் கட்சி மாநாட்டிற்கு பிறகு தான் எதுவாக இருந்தாலும் கூற முடியும்.

தமிழகத்தில் 70 ஆண்டுகளாக திரைபிம்பத்தை வைத்து தான் அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜய்யை மட்டும் ஏன் டார்க்கெட் செய்கிறார்கள். 30 நாளுக்கு மேல் சிறையில் இருக்கும் முதல்-அமைச்சரை பதவியில் இருந்து நீக்கக்கூடிய சட்டத்தை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்