தமிழக செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி...! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி...

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

தினத்தந்தி

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு பெய்த பலத்த மழையினால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையில் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது.

இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இன்று விடுமுறை நாள் என்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால் அங்கு 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு