தமிழக செய்திகள்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

மயிலாடும்பாறையில் உள்ள ஜி.ஆர்.வி.பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

தினத்தந்தி

மயிலாடும்பாறை கிராமத்தில் உள்ள ஜி.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளியில் 1996-ம் ஆண்டு 10-ம் வகுப்பு, 1998-ம் ஆண்டு 12-ம் வகுப்பு படித்த மாணவ-மாணவிகள் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்டனர். அவர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் வந்து இருந்தனர். மாணவர்கள் ஒருவருக்கொருவர் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 1996-ம் ஆண்டு தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களை மலர்தூவி மேடைக்கு அழைத்து வந்து கேடயம் பரிசு வழங்கி ஆசி பெற்றனர். மேலும் இறந்த ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும், இயக்குனர் மற்றும் நடிகருமான மாரிமுத்து என்பவர் கலந்து கொண்டு பழைய நினைவுகளை பேசினார். அப்போது இங்கு தமிழ் படித்ததால் தற்போது திரையுலகில் சாதித்து வருவதாக பெருமையுடன் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்