தமிழக செய்திகள்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கூடலூர் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

கூடலூர்

கூடலூரில் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 1995-1996-ம் ஆண்டு கூடலூர் அரசு மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அவர்கள் தாங்கள் படித்த பள்ளியை பார்வையிட்டு மகிழ்ந்தனர். நேற்று முன்தினம் பள்ளி வழிபாட்டுக் கூட்டத்திற்கு முன்னாள் மாணவர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் சார்பில், வழக்கறிஞர் மேத்யூ அசீஸ், ஜேம்ஸ் சாஜிதா பள்ளிக்கு 35 பிளாஸ்டிக் இருக்கைகளை தலைமை ஆசிரியர் அய்யப்பனிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சுரேஸ், நல்லகுமார், ராஜகோபால், பாண்டியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை