தமிழக செய்திகள்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

வாணியம்பாடியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

வாணியம்பாடி

வாணியம்பாடி புதூர் பகுதியில் உள்ள கன்கார்டியா மேல்நிலைப்பள்ளியில். 1992-1994-ம் ஆண்டு 11 மற்றும் 12-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பில் பள்ளியின் வாசல் முன்பு பேவர் பிளாக் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் இப்பள்ளியில் படித்த மாணவர்கள் 30 வருடங்களுக்கு பின்பு சந்தித்துக்கொண்டதால் அவர்கள் தங்களுடைய பள்ளிப்பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வில்லியம்ஸ், தலைமை ஆசிரியர் கிருபானந்த ராஜ், உதவி தலைமையாசிரியர் ஆனந்த செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ராஜன் நன்றி கறினார்.