தமிழக செய்திகள்

வெண்ணந்தூர் அருகேதடுப்பில் மோதி விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்

தினத்தந்தி

வெண்ணந்தூர்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் வி.பி.சி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மகன் தியாகராஜன் (வயது 30). இவர் சொந்தமாக ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார். இந்த நிலையில் தியாகராஜன் மற்றும் 2 பேர் சேர்ந்து பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் இருந்து நோயாளி ஒருவரை அழைத்து வர சென்றனர்.

அதன்படி சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வெண்ணந்தூர் அருகே ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அந்தசமயம் ஆம்புலன்ஸ் வழிமாறி அங்கு மேம்பால பணிகள் நடக்கும் பகுதியில் சென்று கட்டுப்பாட்டை இழந்து தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தியாகராஜன் உள்பட 3 பேர் காயங்கள் இன்றி உயிர் தப்பினர். இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை