தமிழக செய்திகள்

அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு திட்டம்-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை,

இந்தியாவில் முதன் முறையாக கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள, அம்மா கோவிட் வீட்டு பராமரிப்பு என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின்படி, நோய்த்தொற்று அறிகுறி உள்ளவர்கள் 2 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தினால் பல்ஸ் ஆக்ஸிமீட்டர், வெப்பமானி, மருந்துகள், 14 முகக்கவசங்கள் மற்றும் கிருமிநாசினி அடங்கிய மருத்துவ தொகுப்பு வழங்கப்படும். இவற்றை பயன்படுத்தி அறிகுறி உள்ளவர்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT